Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“அவர் கட்டிடம் கட்டுகிறார்” பொதுமக்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள துலாரங்குறிச்சி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் பொதுப்பாதையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டுகிறார். இதனால் போக்குவரத்திற்கு பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது ஆக்கிரமிப்பு செய்தது உறுதியானால் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்த பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |