உலக நாயகன் கமல்ஹாசனின் மகளும் பிரபல நடிகையுமான சுருதி ஹாசன் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆனால் இவர் தெலுங்கு மற்றும் இந்தி போன்ற பல்வேறு மொழிப் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த சாந்தனு ஹசாரிகாவும் சுருதிஹாசனும் இணைந்து இருப்பது போன்ற பல புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியானது.
இதனால் இருவரும் காதலிக்கிறார்கள் என்று சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இந்நிலையில் ஸ்ருதிகாசன் சாந்தனு ஹசாரிகாவுமடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில் சுருதிஹாசன் சாந்தனு ஹசாரிகாவை சம்சா போன்று இருக்கிறார் என்று கிண்டல் செய்துள்ளார். தற்போது சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.