அவர் செய்த புண்ணியம் கூட அவரை காப்பாற்ற வில்லை என்று நடிகர் விஜய்சேதுபதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் காலமானார்.
அவரின் உடல் இல்லத்தில் அனைவரும் அஞ்சலி செலுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி விவேக் அவர்கள் செய்த புண்ணியம் கூட அவரை காப்பாற்ற வில்லை. இது மிகுந்த வேதனை தருகிறது என்று தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு விவேக் அவர்களுடன் ஒரு படம் நடித்தேன். மாரடைப்பால் மீண்டு அவர் வருவார் என நம்பினேன். இப்படி ஒரு நிலையில் அவர் வீட்டிற்கு வருவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. தங்கமான மனிதன் என்று அவர் உருக்கமாக தெரிவித்தார்.