செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட ஒவ்வொரு திட்டங்களும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம் செயல்வடிவம் பெற்றுள்ளது. அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் கோவில்களில் செயல்படுத்தப்பட்டு, கோவில் நிலங்களும், சொத்துக்களும் மீட்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து பேசிய அவர், இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரை சேகர்பாபு என்று அழைப்பதைவிட “செயல்பாபு” என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும். அனைத்து துறைகளையும் முந்திக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதுவரை இல்லாத அளவிற்கு 120 அறிவிப்புகளை அவர் சட்டமன்றத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் இருபத்தி நான்கு மணி நேரமும் அயராது செயல்பட்டு வருகிறார் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.