6,60,000 ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை 3 முட்டைகளில் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூருக்கு ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடாவில் இருந்து கஞ்சா மூட்டைகள் கடத்தப்படுவதாக போதை பொருள் நுண்ணறிவு பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி போதை பொருள் நுண்ணறிவு பிரிவின் சூப்பிரண்ட் கலைச்செல்வன் உத்தரவின்படி காவல்துறையினர்கள் துறையூர் முசிறி பிரிவு ரோடு அருகில் தீவிர நோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு லாரியை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனை செய்துள்ளனர்.
அந்த சோதனையில் லாரியில் 3 மூட்டைகளில் 66 கிலோ கஞ்சா இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன் பின் காவல்துறையினர் 6,60,000 ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்துவிட்டனர். இதனைத் தொடர்ந்து அந்த லாரியில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் தேனி மாவட்டத்தில் வசிக்கும் முருகானந்தம் என்பவரின் கீழ் செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த காவல்துறையினர் கஞ்சா கடத்தலுக்கு முக்கிய காரணமாக இருந்த முருகானந்தத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.