Categories
சினிமா தமிழ் சினிமா

“அவர் நினைத்ததை இவர் முடித்துவிட்டார்”….. பார்த்திபன் ஓபன் டாக்….!!!!!

இயக்குனர் மணிரத்னம் குறித்து பார்த்திபன் இணையத்தில் பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.

மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் நடித்த பார்த்திபன் இயக்குனர் மணிரத்னம் குறித்து இணையத்தில் பதிவிட்டிருக்கின்றார். அவர் கூறியுள்ளதாவது, Dropped Project என்ற தலைப்பில் இன்று பார்த்தேன். உண்மையில் அவர் இந்த கனவுத்திட்டத்திற்காக சினிமா துறையில் ஒரு விதையை விதைத்தவர். பொன்மனச் செம்மலின் பொன்னியின் செல்வன். எண்ணங்களில் உயர்ந்தவர் என்றோ முதல்வராகி விட்டார் இக்காவியம் படைக்க. நினைத்ததை முடிப்பவன், அவர் நினைத்ததை எல்லாம் அவர் நினைத்ததை எல்லாம் முடிப்பவர் CM உட்பட.. அப்படிப்பட்ட மனிதர் நினைத்தை மணிரத்னம் முடித்திருக்கின்றார். விதைத்தது எம்.ஜி.ஆர் விளைத்தது எம்.ஆர் நமக்கது பெருமை என பதிவிட்டு இருக்கின்றார்.

எண்ணங்களில் உயர்ந்தவர், என்றோ முதல்வராகி விட்டார் இக்காவியம் படைக்க.’ நினைத்ததை முடிப்பவன்’-அவர் நினைத்ததை எல்லாம் அவர் நினைத்ததை எல்லாம் முடிப்பவர் சிஎம் (CM) உட்பட! அப்படிப்பட்ட மனிதர் நினைத்ததை மணிரத்னம் முடித்துள்ளார்.

Categories

Tech |