இளவரசர் ஹரி – மேகன் தம்பதிகள் அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி ஒன்றிக்கு பேட்டி அளித்ததற்கு ராஜ குடும்ப வரலாற்று ஆசிரியர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்தவர் ஹியூகோ விக்கெர்ஸ். இவர் ராஜ குடும்ப வாழ்க்கையின் வரலாற்று ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரிட்டன் இளவரசர் ஹரி – மேகன் தம்பதிகள் ஒன்றிணைந்து அமெரிக்காவின் சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்துள்ளதை பார்த்த இவர் ஹரியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது பிரிட்டன் இளவரசி டயானா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கார் விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கடந்த 2004 ஆம் ஆண்டு சிபிஎஸ் தொலைக்காட்சி ஒளிபரப்பியதை கண்டு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் அப்போதைய பிரிட்டன் பிரதமர் “இந்த புகைபடங்கள் டயானாவின் குடும்பத்திற்கு கடும் வருத்தத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் அதனை ஒளிபரப்பியது சரியில்லை” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அதே புகைப்படம் இத்தாலி பத்திரிக்கை ஒன்றில் வெளிவந்ததற்கு இளவரசர் வில்லியமும், ஹரியும் சேர்ந்து இதனால் தாங்கள் ஆழ்ந்த கவலை அடைந்ததாகவும் , பத்திரிக்கை தரமிறங்கி நடந்துகொண்டதாகவும் கூறி கண்டித்துள்ளனர்.இந்நிலையில் தன் தாயை அவமதித்த அந்த தொலைக்காட்சிக்கு ஹரியால் எப்படி பேட்டி கொடுக்க முடிந்தது? ஒரு வேலை அவருக்கு ஞாபகம் இல்லையா அல்லது ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு விட்டதால் வேறு வழியின்றி ஒப்புக் கொண்டாரா? அவர் பாசாங்கு செய்கிறார் என்று ராஜா குடும்ப வரலாற்று ஆசிரியர் விமர்சனம் செய்துள்ளார்.