இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் நடைபெற்று வரும் மேட்சில் விராட் கோலி சரியாக ஆடாததால் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டுக்கு பிறகு விராட் கோலி எந்த சதமும் அடிக்கவில்லை. இவர் ஐ.பி.எல் வரலாற்றில் முதன் முறையாக 3 கோல்டன் டக் அவுட் ஆகியுள்ளார். இவரை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் விராட் கோலியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதாவது எத்தனை நாட்களுக்கு சதம் அடிக்காமல் காலத்தை தள்ளப் போகிறீர்கள் என்றும், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகிறது என்றும், டி20 மேட்ச் அஸ்வினை எடுக்காத போது விராட் கோலியை மட்டும் எடுத்தது எதற்காக எனவும் கபில்தேவ் கடுமையாக சாடியிருந்தார்.
இந்நிலையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால், அணியில் இருந்து நீக்கப்பட வேண்டியவரை கிரிக்கெட் வாரியம் ஓய்வு கொடுத்து அனுப்பியதில் எந்த ஒரு தவறும் இல்லை என கபில்தேவ் கூறியுள்ளார். இது தொடர்பாக கபில்தேவ் கூறியதாவது, ஒரு நல்ல வீரரை அணியிலிருந்து நீக்குங்கள் என்று நான் கூற முடியாது. ஏனெனில் விராட் கோலி ஒரு மிகப்பெரிய மற்றும் சிறந்த வீரர் ஆவார். இருப்பினும் விராட் கோலி ஃபார்முக்கு திரும்புவதற்கு நல்ல பயிற்சி எடுத்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மேலும் சிறப்பாக செயல்படாத பட்சத்தில் கிரிக்கெட் வாரியம் நீக்குவது மற்றும் ஓய்வு கொடுப்பதில் எந்த ஒரு தவறும் கிடையாது. நான் விராட் கோலி ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என்று தான் விருப்பப்படுகிறேனே தவிர அவரை நீக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த விருப்பமும் கிடையாது. ஒரு சிறந்த வீரர் பார்முக்கு திரும்ப நீண்ட நாட்கள் ஆகாது. அவர் மீது உள்ள அக்கறையில் தான் நான் கூறுகிறேன் தவிர அவர் மீது வேறு தனிப்பட்ட விரோதம் என்று எதுவும் கிடையாது என கபில்தேவ் கூறியுள்ளார்.