பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணம்ராஜூ அண்மையில் இறந்தார். இவர் நடிகர் பிரபாஸின் பெரியப்பா ஆவார். பிரபாஸை திரையுலகிற்கு கொண்டுவந்ததில் இவருக்கு பெரும் பங்கு இருக்கிறது. கிருஷ்ணம்ராஜூ பிறந்த ஊரான கிழக்கு கோதாவரி மாவட்டம் மொகல்தூர் கிராமத்தில் நினைவு அஞ்சலி கூட்டம் நடந்தது. இவற்றில் பிரபாஸ் பங்கேற்றார். இக்கூட்டத்தில் தன் பெரியப்பா பெயரில் அறக்கட்டளை துவங்குவதாகவும், முதற்கட்டமாக அந்த அறக்கட்டளைக்கு 3 கோடி ரூபாய் கொடுப்பதாகவும் பிரபாஸ் அறிவித்தார்.
மேலும் இந்த விழாவில் வந்த நடிகையும், ஆந்திர மாநில நகர்புற வளர்ச்சிதுறை வாரிய தலைவருமான ரோஜாவும் பங்கேற்றார். அப்போது அவர் கிருஷ்ணம் ராஜு பிறந்த இந்த ஊரில் அரசு அவருக்கு நினைவிடம் கட்ட ஏற்பாடு செய்யும். இதற்காக 2 ஏக்கர் நிலம் ஒதுக்கித்தரப்படும் என அறிவித்தார். இந்நிகழ்வில் பிரபாஸ் 1 லட்சம் பேருக்கு விருந்தளித்தார். பிரபாஸ் சொந்த கிராமத்துக்கு வந்ததை அறிந்து லட்சக் கணக்கான மக்கள் திரண்டனர். இதனால் காவல்துறையினர் அவர்களை மிகவும் சிரமப்பட்டு கட்டுப்படுத்தினர். இதற்கிடையில் வீட்டின் பால்கனியில் நின்று அவர் ரசிகர்களின் அன்பை ஏற்றுக்கொண்டார்