Categories
சினிமா தமிழ் சினிமா

“அவர் மட்டும் இல்லன்னா நான் அவ்வளவுதான்”…. நடிகர் தனுஷ் உருக்கம்….!!!!!!

நடிகர் தனுஷ் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். இவர் இடையில் சில சறுக்கல்களை சந்தித்தாலும் திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம் வெற்றி பாதைக்கு திரும்பி இருக்கின்றார். இவர் தற்பொழுது வாத்தி, நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் நானே வருவேன் திரைப்படம் இம்மாதம் 30-ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. இந்த நிலையில் தனுஷ்-செல்வராகவன்-யுவன் சங்கர் ராஜா கூட்டணி பல ஆண்டுகளுக்குப் பிறகு நானே வருவேன் திரைப்படத்தின் மூலமாக மீண்டும் இணைந்து இருக்கின்றது.

இந்த நிலையில் தனுஷ் சில வருடங்களுக்கு முன்பாக யுவன் சங்கர் ராஜா பற்றி உருக்கமாக பேசியது தற்பொழுது வைரலாகி வருகின்றது. அதில் அவர் பேசியுள்ளதாவது, என் முதல் படமான துள்ளுவதோ இளமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைப்பாளர். அன்று புது முகங்கள் நடிக்கும் படமான துள்ளுவதோ இளமை படத்திற்கு யுவனின் இசை தான் முகவரியாக அமைந்தது. அவரின் பாடல்கள் ஹிட் அடிக்கவே படத்தின் மீது ரசிகர்களின் பார்வை விழுந்தது. அப்பொழுது துள்ளுவதோ இளமை படம் மட்டும் ஓடவில்லை என்றால் எங்களின் நிலைமை மோசமாகி இருக்கும். என்னுடைய திரை பயணத்தில் யுவன் சங்கர் ராஜா செய்த காரியம் மிகப்பெரியது என தனுஷ் உருக்கமாக பேசி உள்ளார்.

 

Categories

Tech |