இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டிருப்பதால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். மாலத்தீவு சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து நாடுகளின் தஞ்சம் அடைந்திருந்த அவர் 51 நாட்களுக்கு பின் நேற்று முன்தினம் நள்ளிரவு இலங்கை திரும்பியுள்ளார். முன்னாள் அதிபரான கோத்தபய ராஜபக்சேவுக்கு இலங்கை அரசு சார்பில் கொழும்பில் பங்களா ஒதுக்கப்பட்டிருக்கிறது. அந்த பங்களாவில் அவர் தங்கி இருக்கின்றார். பங்களாவை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. 24 மணி நேரமும் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் முன்னாள் அதிபர் ஒருவருக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் கோத்தபாய ராஜபக்சேவுக்கு கொடுக்கப்படும் என இலங்கை அதிபரின் செயலாளர் சமன் ஏக நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும் என போராட்டக்காரர்கள் மற்றும் சில தலைவர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர். இது தொடர்பாக ஆசிரியர் தொழிற்சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் பேசும்போது இலங்கையில் உள்ள 2.2 கோடி மக்களுக்கு துயரத்தை ஏற்படுத்தியதற்காக அவர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் மேலும் கோத்தபய ராஜபக்சேவை எந்த நாடும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அவர் மறைந்திருக்க இடமில்லை என்ற காரணத்தினால் நாடு திரும்பி உள்ளார் எதுவும் நடக்காதது போல அவர சுதந்திரமாக வாழ முடியாது என தெரிவித்துள்ளார். இதேபோல கோத்தபைய ராஜபக்ச கைது செய்ய வேண்டும் என போராட்டக்காரர்கள் தெரிவித்து இருக்கின்றார்கள். மேலும் கோத்தபய ராஜபக்சே நாடு திரும்பியது பற்றி இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியின் சமாஜியின் பலவேகையா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் அந்த கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அவர்கள் பேசும்போது கோத்தபய ராஜபக்சே மீது வழக்கு தொடர பட வேண்டும் என தெரிவித்துள்ளார். முன்னாள் எம்பி அஜித் பெரேரா பேசும் போது அதிபர் பதவிக்கு முன்னரும் அதிபராக இருந்த காலத்திலும் கோத்தபாய் ராஜபக்சே செய்த குற்றங்களுக்கு அவர் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.