மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியன் செல்வன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. 1st Half முடிந்துள்ள நிலையில், #1st_Half என்ற ஹேஷ்டேக் இந்தியா அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த ஐஸ்வர்யாராய் குறித்து நடிகை மீனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இதற்கு மேலும் என்னால் இது ரகசியமாக வைத்திருக்க முடியாது.
எனக்கு பொறாமையாக இருக்கிறது. வாழ்க்கையிலேயே முதல் முறையாக நான் ஒருவர் மீது பொறாமைப்படுகிறேன் அவர் ஐஸ்வர்யா ராய். பொன்னியின் செல்வன் படத்தில் என்னுடைய கனவு கதாபாத்திரமான நந்தினியாக அவர் நடித்துள்ளார். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.