பிரபல சின்னத்திரை நடிகையான பாவனி தன்னுடைய முதல் கணவரின் மரணத்திற்கு பிறகு மீடியாவில் இருந்து விலகி இருந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் வெளிஉலகிற்கு வந்தார் . அப்போது அமீரோடு காதல் சர்ச்சையில் சிக்கினார். இதனையடுத்து இவர்கள் இருவரும் காதல் ஜோடிகளாக தற்போது வலம் வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்த்து நிலையில் தற்போது பாவணி நிகழ்ச்சி ஒன்றில் கூறிய பதில் பலரையும் குழப்பம் அடைய வைத்துள்ளது.
அதாவது கடந்த கால வாழ்க்கையில் இருந்து நீங்கள் எதை பெற விரும்புகிறீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு என்னுடைய கணவர் திரும்ப வரவேண்டும் எனவும், அவர் இப்போது உயிரோடு இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் அமீர் தனது என்னுடைய இரண்டாவது கணவர் என்று தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். நான் அமீரோடு மகிழ்ச்சியாக இருக்கிறேன். இவரின் இந்த பதில் குழப்பம் அடைய வைத்தாலும் பாவனி இன்னும் பழைய வாழ்க்கையிலிருந்து திரும்பவில்லை என்று தெளிவாகிறது