Categories
உலகசெய்திகள்

“அவர் வாயை மூடிக் கொண்டிருந்தால் அவரது மதிப்பிற்கு நல்லது”… தென் கொரிய அதிபரை கடுமையாக விமர்சித்த கிம் சகோதரி…!!!!

தென் கொரியா அதிபர் யோன் சுக் இயொல் கடந்த புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது வடகொரியா அணு ஆயுதத்தை கைவிட்டால் அந்த நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவ தென்கொரியா தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில் தென்கொரியா அதிபரின் கோரிக்கையை வடகொரியா நிராகரித்து இருக்கின்றது. மேலும் இது தொடர்பாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் ஜோ ஜாங் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கிம் ஜோ அவர்கள் வாயை மூடிக்கொண்டு இருந்தால் அவரது மதிப்பிற்கு நல்லது எனக் கூறியுள்ளார். பொருளாதார ஒத்துழைப்பிற்காக வடகொரியாவின் மரியாதை மற்றும் அணு ஆயுதங்களை வர்த்தகம் செய்ய முடியும் என அவர் நினைப்பது மிகவும் எளிமையானது மற்றும் சிறுபிள்ளைத்தனமானது எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |