Categories
அரசியல்

“அவர அடிக்கிறதுக்கு நீங்க யாரு….??” ஜெயக்குமாரை விளாசிய அமைச்சர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அளவிலான தற்காப்பு கலை போட்டிகள் நடைபெற்றன. இதனை தமிழக தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது, “ஐடி துறை சார்பில் 8000 ஓலைச்சுவடிகள் மின்னணு வாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்தது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. ஜெயக்குமார் செய்த தவறுக்கான தண்டனையை தான். திமுக நிர்வாகி கள்ள ஓட்டு போட்டார் என்பதற்காக அவரை அடித்து அரைநிர்வாணம் படுத்தும் அளவிற்கு இவருக்கு அதிகாரம் யார் கொடுத்தது.

அதிமுகவினர் இதனை பழிவாங்கும் நடவடிக்கை என கூறி வருகின்றனர். இது ஜெயக்குமார் செய்த தவறுக்கான தண்டனையை தான் எனவே ஜெயக்குமார் மீது சட்டப்படி தான் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஐடி துறை சார்பில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற இருக்கிறது. அதனை விரைவில் முதலமைச்சர் துவங்கி வைப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Categories

Tech |