Categories
தேசிய செய்திகள்

அவலத்தின் உச்சம்…. கொரோனா நோயாளி சடலம் சாலையில் வீசப்பட்டு பரபரப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது.

அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் மருத்துவமனையில் பில் கட்ட ஒரு நோயாளி ஒருவரின் சடலம் சாலையில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் இறந்தவர் ஒருவரின் குடும்பத்திடம் சிகிச்சை கட்டணத்தை முழுமையாக கட்டினால் மட்டுமே சடலத்தை தர முடியும் என கூறியுள்ளனர். அவர்களால் கட்ட முடியாததால் உடல் சாலையில் வீசப்பட்டது. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |