Categories
தேசிய செய்திகள்

அவலத்தின் உச்சம்…. தாயின் சடலத்தை பைக்கில் எடுத்துச் சென்ற மகன்….. வைரலாகும் வீடியோ….!!!!

ஆந்திர மாநிலத்தில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த தாயின் சடலத்தை ஆம்புலன்ஸில் ஏற்ற மறுத்ததால் அவரது மகன் பைக்கில் நண்பர் உதவியுடன் கொண்டு சென்றுள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் செஞ்சுலம்மா (50) என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் நேற்று முன்தினம் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தார். அதனால் அவரது மகன் தனது தாயை அழைத்துக்கொண்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளார். அதன்பிறகு தனது கிராமத்திற்கு தாயின் உடலை எடுத்துச் செல்ல மகன் ஆம்புலன்ஸ் சேவையை கேட்டுள்ளார்.

ஆனால் அவர்கள் கொரோனா அச்சம் காரணமாக சடலத்தைக் கொண்டு செல்ல முன்வரவில்லை. தனது தாய்க்கு கொரோனா இல்லை என்று கூறியும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மறுப்பு தெரிவித்துவிட்டனர். அதனால் என்ன செய்வது என்று அறியாமல் தவித்த மகன், தனது நண்பரை பைக் ஓட்டும்படி கூறி விட்டு தனது தாயின் சடலத்தை பைக்கில் உட்கார வைத்த நிலையில் முக கவசம் அணிவித்து சொந்த ஊருக்கு கொண்டு சென்றார். இந்த சம்பவங்களை மருத்துவமனையில் இருந்த போலீசாரும் பார்த்து யாரும் கண்டுகொள்ளாமல் இருந்தனர். இதனை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |