வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள புது மஜீத் வீதியில் கேரள மாநிலத்தை சேர்ந்த சபான் பையாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மணிக்கூண்டு பகுதியில் இருக்கும் ஒரு செல்போன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சபான் ஒரு தலையாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இதனால் தனது காதலை வெளிப்படுத்த முடியாமல் மன உளைச்சலில் இருந்த சபான் தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.