குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்ற தனது தங்கையை மீட்டுத் தருமாறு சகோதரர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்துவருகிறார். இவர் தன் தங்கையை மீட்டுத் தருமாறு காவல் காவல்துறையினரிடம் புகார் மனு அளித்துள்ளார். அம்மனுவில் கூறப்பட்டதாவது, தனது சகோதரியான சுந்தரி கணவரால் கைவிடப்பட்ட நிலையில் 2019 – ஆம் ஆண்டு தனக்கு தெரிந்த ஒருவரின் மூலம் குவைத் நாட்டிற்கு வீட்டு வேலைக்காக சென்றிருந்தார். இந்நிலையில் அங்கு வேலை பார்க்கும் சுந்தரியை கொடுமை படுத்துவது எனக்கும் எனது குடும்பத்திற்கும் தெரியவந்தது. மேலும் எங்களால் அவரை எவ்வழியிலும் தொடர்பு கொள்ள முடியாததால் சுந்தரியின் உயிருக்கு ஆபத்து நேர்ந்து விடுமோ என பயப்படுகிறோம். ஆகவே எனது தங்கையை மீட்டு எங்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும்படி, அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.