பிரபல நடிகையின் வெப்சீரிஸ் எம் எக்ஸ் பிளேயரில் வெளியாகப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகை நைனா கங்குலி இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கிய vanga veeti எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார். இதனையடுத்து இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் குறும்படம் ஒன்றில் நைனா கங்குலி நடித்தார். இந்த குறும்படம் தான் நைனா கங்குலிக்கு மிகப்பெரிய பெயர் வாங்கி கொடுத்தது. இதனையடுத்து இவருக்கு வெப் சீரிஸ் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. இவர் நடித்த charitra heen எனும் வெப் சீரிஸ் பெங்காலி மொழியில் ரிலீஸாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து நைனா கங்குலி சில வெப் சீரிஸ் நடித்து முடித்துள்ளார்.
இவர் ராம்கோபால் இயக்கத்தில் டேஞ்சரஸ் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில் நைனா கங்குலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தகனம் எனும் வெப்சீரிஸ் எம் எக்ஸ் பிளேயரில் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையிடப்பட்டது. இதில் நைனா கங்குலி சேலையில் மிகவும் குடும்ப பாங்காக காட்சி அளிக்கிறார். இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நைனா கங்குலி பார்க்க இவள் அப்பாவியாக தெரியலாம் ஆனால் எங்கு எப்படி முத்திரை பதிப்பது என அவளுக்கு தெரியும் என பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் எப்படி இருந்த நடிகை இப்படி மாறி விட்டார் என கமெண்ட் செய்து வருகின்றனர்..