Categories
சினிமா தமிழ் சினிமா

அவள போக விட்ருக்க கூடாது… நான் தான் தப்பு பண்ணிட்டேன்… உருக்கமாக பேசிய சிம்பு…!!!

யுவன் சங்கர் ராஜா இசையில் சிம்பு பாடிய தப்பு பண்ணிட்டேன் ஆல்பம் பாடலின் டீசர் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் யுவன் சங்கர் ராஜாவின்  ‘U1 ரெகார்டஸ்’ தயாரிப்பு நிறுவனம் ‘தப்பு பண்ணிட்டேன்’ என்கிற ஆல்பம் பாடலை தயாரித்துள்ளது. ஏ.கே.பிரியன் இசையமைத்துள்ள இந்த பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ்  இருவரும் இந்த ஆல்பம் பாடலில் நடித்துள்ளனர். மேலும்  சாண்டி மாஸ்டர் இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். இந்நிலையில் தப்பு பண்ணிட்டேன் ஆல்பம் பாடலின் டீஸர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .

இந்த டீசரில் சிம்பு ‘பிரிய போறோம்னு தெரிஞ்சி யாரும் லவ் பண்றதில்ல. சின்ன சின்ன கோபம், பொஸசிவ்னஸ், முக்கியமா ஈகோ தான் எங்கள பிரிச்சிருச்சு. நான் அவள போக விட்டுருக்க கூடாது. அப்புறம் எதுக்கு நான் அவள லவ் பண்ணுனேன். தப்ப அவ பண்ணல. நான் தான் பண்ணிட்டேன். தப்பு பண்ணிட்டேன்’ என உருக்கமாக பேசியுள்ளார். விரைவில் இந்த பாடல் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |