திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கேரள பேருந்து விபத்தில் உயிரிழந்த 19 பேரின் குடும்பத்திற்கு தலா 10 இலட்சம் நிதி வழங்கப்படும் என கேரள அமைச்சர் சுசீந்திரன் அறிவித்துள்ளார்.
மேலும் முதற்கட்டமாக 19 பேரின் குடும்பத்திற்கு 2 இலட்சம் வழங்கப்படும் என்றும், அரசு பேருந்து ஓட்டுனரின் குடும்பத்திற்கு காப்பீட்டுத் தொகையாக 30 இலட்சம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.