செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஒரு குருமாரை நீங்கள் பல்லக்கில் தூக்குவது சாதாரண மனிதனை கிடையாது அவர் குருமார்கள். அதனால் தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்கிறோம். நீங்கள் ஒரு கோவிலுக்கு போனால் கூட கோவிலில் இருக்கக்கூடிய கடவுளை, சாயங்காலம் பல்லக்கில் வெளியில் தூக்கி கொண்டு வருகின்றோம், நீங்கள் கடவுளாகவும், குருவாகவும் பார்க்கலாம்.
என்னை பொருத்தவரை ஒரு குரு என்பவர் கடவுளுக்கு சமம். நான் மனிதனின் என்கின்ற வார்த்தையை பயன்படுத்த மாட்டேன். ஆசை, பற்று எல்லாவற்றையும் தாண்டியவர்கள் குருமார்கள். அதனால் இதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள், அதனால் நான் நிச்சயமாக ஏற்றுக் கொள்கின்றேன், ஒரு கூலியாக ஒரு தனி மனிதனை அடிமை படுத்துவதற்காக அவரை தூக்குவது பாரதிய ஜனதா கட்சி எப்போதுமே அனுமதிக்காது.
ஆனால் எந்த ஒரு புரிதலும் இல்லாமல் தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆன்மீக மண்ணினுடைய புரிதல் இல்லாமல் எந்த ஒரு குரு, மாதா எதுவுமே தெரியாமல் ஒரு குருவை மனிதனாக நாங்கள் தூக்குகிறோம் என்றால் இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அப்படி பார்த்தால் எத்தனையோ இடத்தில் நான் திமுக கட்சிக்காரர்கள் ஒவ்வொருவரை பட்டியலிடுகிறேன். எவ்வளவு கோவிலில் போய் அவர்கள் என்ன எல்லாம் பண்ணி இருக்கிறார்கள் என்று பார்க்கலாம். அது எல்லாம் பேசுவோம், இது முழுவதுமே அரசியலுக்காக என விமர்சித்தார்.