Categories
அரசியல் மாநில செய்திகள்

அவுட்டான அதிமுக….? ‘திமுகவிற்கு நேரடியாக செக் வைக்கும் பாஜக’…. கைகொடுக்குமா? இல்ல அதிமுக விழித்துக் கொள்ளுமா….?

திருப்பூரில் நடைபெற்ற பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. திராவிட அரசியல் நடைபெறும் தமிழகத்தில் தாமரையை மலர செய்ய வேண்டும் என்பதற்காக பாஜக செயல்பட்டு வருகின்றது. பலம் வாய்ந்த அதிமுக, திமுகவிலிருந்து முக்கிய புள்ளிகளை தங்கள் வசப்படுத்தி, மத்திய புலனாய்வு அமைப்புகள் மூலம் ஆட்சியில் இருப்பவர்களுக்கு குடைச்சல் கொடுத்து, சமூக வாக்குகளை ஈர்த்து பக்கா ஸ்கெட்ச் போட்டு காய்களை நகர்த்தி வருகின்றது பாஜக. இதற்கு பலனாக கடந்த சட்டமன்ற தேர்தலில் நான்கு இடங்களில் பாஜக வென்றது. தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜக வராது என்று கூறியதற்கு மாறாக 4 இடங்களில் வெற்றி பெற்றது.

மேலும் தமிழகத்திற்கு தேசிய தலைவர்களின் வருகை அதிகப்படுத்தும் முடிவு செய்து, அரசியல் பயணங்கள் மட்டுமல்லாமல் ஆன்மீக பயணங்களுக்கும் பிற மாநில பாஜக முதல்வர்கள் தமிழகத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர். 2024 மக்களவைத் தேர்தல் 2026 சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றை கொண்டு பாஜக செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் அதிமுகவில் இரட்டை தலைமை, உட்கட்சி பூசல் உள்ளிட்ட பிரச்சனைகள் காரசார விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வரும் பாஜக எதிர்க்கட்சியான அனைத்து அம்சங்களையும் கையில் எடுக்கத் தொடங்கியுள்ளது.

மின்துறையில் பல கோடி ஊழல் செய்த செந்தில் பாலாஜி மீது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டை முன்வைக்க அரசியல் சூடுபிடித்துள்ளது. இதில் தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை, பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைத்தாலும் தமிழக அரசு குறைக்கவில்லை,  நீட் தேர்வு ரத்து என வாக்குறுதி தந்தது, மழையின்போது போதிய முன்னேற்பாடுகள் செய்யவில்லை என்று திமுகவிற்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

அதுமட்டுமில்லாமல் கோவில்களில் தங்கத்தை உருக்குவதில் நீதிமன்ற உத்தரவுபடி செயல்பட வேண்டும். பயிருக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் நிவாரணம் வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் திமுக அரசுக்கு எதிரான தாக்குதலை பாஜக கையில் எடுத்துள்ளது. பாஜகவின் இத்தகைய அரசியல் வரும் நாட்களில் கைகொடுக்குமா? இல்லை அதிமுக விழித்துக் கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Categories

Tech |