Categories
கிரிக்கெட் விளையாட்டு

அவுட்ஸ்விங்: கபில்தேவ் போல் கலக்கும் முகமது சமி…. பாராட்டு தள்ளிய ரவி சாஸ்திரி….!!!!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நான்காவது லீக் ஆட்டத்தில் குஜராத் மற்றும் லக்னோ அணிகள் மோதிக்கொண்டன. அதில் குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக முகமது சமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல் பந்தில் கே.எல் ராகுலின் விக்கெட்டை கைப்பற்றினார். அந்த பந்து சிறப்பான அவுட்ஸ்விங் முறையில் வீசப்பட்டது. டி காக் மற்றும் மணிஸ் பாண்டே ஆகியோரது விக்கெட்டையும் முகமது சமி சுலபமாக கைப்பற்றினார்.

இந்த நிலையில் முகமது சமியை கபில்தேவுடன் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஒப்பிட்டுள்ளார். முன்னாள் கேப்டன் கபில்தேவ் நள்ளிரவு 12 மணிக்கு எழுப்பி பந்துவீச சொன்னாலும் அவர் அருமையாக அவுட் ஸ்விங் வீசுவார். அதனைப் போல தான் முகமது சமியும். இவரைப் போலவே சில வீரர்கள் இடம் மட்டுமே இத்தகைய திறமை உள்ளது என்று அவர் பாராட்டியுள்ளார்.

Categories

Tech |