உத்தவ்தாக்கரே தலைமையிலான அரசிலிருந்து சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பிரிந்தனர். சென்ற மாதம் இறுதியில் இந்நிகழ்வுகள் அரங்கேறியது. இதனிடையில் அந்த இக்கட்டான நிலையில் சென்ற 29ம் தேதி உத்தவ்தாக்கரே தலைமையில் கடைசி மந்திரி சபை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் மராட்டியத்திலுள்ள அவுரகாபாத் நகருக்கு சம்பாஜிநகர் எனவும் உஸ்மனாபாத் நகருக்கு தாராஷிவ் எனவும் பெயர் மாற்றம் செய்ய உத்தவ் தாக்கரே தலைமையில்கூடிய கடைசி மந்திரி சபை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த ஒப்புதலை தொடர்ந்து இருநகரங்களுக்குமான பெயர்களை மாற்றும் பணிகளை புதியதாக பொறுப்பேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா-பாஜக கூட்டணி அரசு துரிதப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது.
இந்த நிலையில் அவுரங்காபாத் பெயரை மாற்றுவதால் அரசுக்கு ரூபாய் 1,000 கோடி செலவு ஏற்படலாம் என அசாதுதீன் ஓவைசியின் அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் (எஐஎம்ஐஎம்) கட்சி எம்.பி. இம்தியாஸ் ஜலீல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எம்.பி. இம்தியாஸ் ஜலீல் கூறியதாவது “அவுரங்காபாத் நகரின் பெயரை மாற்றுவது அரசுக்கு நிதிச் சுமையாக சுமார் 1,000 கோடி ரூபாய் செலவை ஏற்படுத்தலாம். அதுவும் அரசு துறைகளிலுள்ள ஆவணங்களில் பெயரை மாற்றுவதற்கு மட்டுமே இவ்வளவு செலவாகலாம். பொதுமக்களும் சில ஆயிரம் கோடி ரூபாய் நிதிச் சுமையை சந்திக்க நேரிடலாம்” என்று கூறினார்.