Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அவ இல்லாம என்னால இருக்க முடியல… பெயிண்டர் எடுத்த விபரீத முடிவு… நாகையில் சோகம்..!!

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே மனைவி பிரிந்த மன வேதனையில் பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள ஆந்தகுடி வடக்கு தெருவில் முருகையன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி ராணி. இவர்களுக்கு அருண்பாண்டி என்ற மகன் இருந்தார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அலிவலம் பகுதியில் வசித்து வரும் செல்வம் என்பவருடைய மகள் கார் குலஸ்தேவியை காதல் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கார் குலஸ்தேவி கோபத்தில் ஒரு மாதத்திற்கு முன் அவருடைய தகப்பனார் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் அருண்பாண்டி மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அருண்பாண்டி தாய் ராணி கீழ்வேளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |