மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள வலையபட்டி ரோஜா நகரில் வசித்து வந்த மணிகண்டன்(27) என்பவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஷாலினி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு ஷாலினி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மனைவி இறந்ததால் மணிகண்டன் மனமுடைந்து வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த மணிகண்டன் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக மணிகண்டனை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட நிலையிலும் சிகிச்சை பலனின்றி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்து. இதுகுறித்து மணிகண்டனின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.