அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி செலுத்துவதால் மூளையில் ரத்த கட்டி ஏற்படுவதாக எழுந்த சந்தேகத்தால் அந்த தடுப்பூசியை பயன்படுத்த ஜெர்மன் நாடு தடை செய்துள்ளது.
அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை ஜெர்மன் மற்றும் ஐரோப்பாவில் பயன்படுத்தியவர்களுக்கு மூளையில் இரத்தக்கட்டி ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் ஜெர்மன் சுகாதார அமைச்சகம் பால் எர்லிச் நிறுவனத்தின் பரிந்துரையால் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை தடை செய்யப்போவதாக கூறப்படுகிறது.மேலும் ஜெர்மன் சுகாதாரத் துறை அமைச்சரான ஜென்ஸ் ஸ்பான் தடுப்பூசிகளை போட்ட 1.6 மில்லியன் பேரில் ஏழு பேருக்கு இதுவரை தடுப்பூசியால் மூளையில் ரத்த கட்டி ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறைந்த அளவில் தான் என்றாலும் தடுப்பூசி போடப்பட்டதால் தான் ஏற்பட்டது என்பதில் பிரச்சினை என்று கூறுகிறார். மேலும் இது குறித்து ஜென்ஸ்ஸ்பான் கூறுகையில், இந்த முடிவு அரசியல் பூர்வமானது என்றும் பால் எர்லிச் நிறுவனத்தின் பரிந்துரையால் தான் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றும் கூறியுள்ளார்.