Categories
உலக செய்திகள்

அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி…. ஆய்வுகளில் தெரியவந்த உண்மை…. தொடர்ந்து பயன்படுத்த முடிவு செய்த நாடு….!!

அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி ரத்த உறைவு பிரச்சனைகளை ஏற்படுத்துவதால் பல்வேறு நாடுகள் தடை செய்து வரும் நிலையில் பிரான்ஸ் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரான்சிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே ஐரோப்பிய மருந்து கண்காணிப்பு குழு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு அஸ்ட்ராஜெனேகா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிகள் ரத்த உறைவு பிரச்சனைகளை ஏற்படுகிறது என்பதை கண்டுபிடித்ததாக கூறியுள்ளது.

இந்நிலையில்  55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஜெனேகா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என பிரான்ஸ் செய்தித் தொடர்பாளர் Gabriel Attal தெரிவித்துள்ளார். இதனிடையே சில நாட்களுக்கு முன்பு டென்மார்க் ரத்தக் கட்டிகளை உருவாக்குவதால் இந்த தடுப்பூசியை முற்றிலும் தடைசெய்தது. பல்வேறு நாடுகள் தடை செய்து வரும் நிலையில் பிரான்ஸ்  அஸ்ட்ராஜெனேகா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிகளை பயன்படுத்துவது என முடிவுசெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |