பிரிட்டன் அரசு மக்களுக்கு முதல் கட்ட மாடர்னா தடுப்பூசி போடும் பணியை தொடங்கியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் சுமார் 22 மில்லியன் மக்களுக்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் 5.5 மில்லியன் மக்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து பிரிட்டனில் ஏப்ரல் மாதம் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விநியோகம் குறைந்து காணப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் 100 மில்லியன் டோஸ்கள் கிடைக்க இன்னும் 4 வாரங்கள் ஆகும் என அறிவிக்கப்ட்டுள்ளது. இதனிடையே அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போட்டுக் கொண்ட 30 பேருக்கு ரத்த உறைவு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாலும் 7 பேர் உயிரிழந்ததாலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. .
இந்த பிரச்சனையின் காரணமாக பிரிட்டன் இடைப்பட்ட காலத்தை உபயோகமாக செலவழிக்க மாடர்னா தடுப்பூசியை வழங்கி வருகிறது. இதுவரை சுமார் 17 மில்லியன் தடுப்பூசியை அரசு ஆர்டர் செய்துள்ளது. அதன் முதல் தொகுப்பு கிடைத்துள்ள நிலையில் அந்நாட்டில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.