அஸ்வின் ஹீரோவாக நடிக்கும் என்ன சொல்ல போகிறாய் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தொலைக்காட்சி சீரியல்கள், ஆல்பம் பாடல்கள், திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர் அஸ்வின். இதையடுத்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார். தற்போது அறிமுக இயக்குனர் ஹரிஹரன் இயக்கியுள்ள என்ன சொல்ல போகிறாய் படத்தில் அஸ்வின் கதாநாயகனாக நடித்துள்ளார். தேஜு அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா இருவரும் இந்த படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
எல்லா புகழும் இறைவனுக்கே 😇🙏🏻
Ungal anbai nambi 🥰#peopleslove♥️ https://t.co/JV9kNClK8j— Ashwin Kumar (@i_amak) October 27, 2021
மேலும் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு விவேக்- மெர்வின் இசையமைக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் என்ன சொல்ல போகிறாய் படத்தின் செம ரொமான்டிக்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.