Categories
சினிமா தமிழ் சினிமா

அஸ்வினின் ‘குட்டி பட்டாஸ்’… பாடல் செய்த டக்கரான சாதனை… ரசிகர்கள் கொண்டாட்டம்…!!!

அஸ்வின், ரெபா மோனிகா நடிப்பில் வெளியான ‘குட்டி பட்டாஸ்’ பாடல் 15 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, நினைக்கத் தெரிந்த மனமே உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் அஸ்வின். மேலும் இவர் ஓகே கண்மணி உள்ளிட்ட சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் குக் வித் கோமாளி2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அதிக அளவு பிரபலமடைந்துள்ளார். தற்போது அஸ்வின் பிகில் பட நடிகை ரெபா மோனிகா ஜானுடன் இணைந்து குட்டி பட்டாஸ் என்கிற மியூசிக்கல் ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இந்தப் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்துள்ள இந்தப் பாடலை வெங்கி இயக்கியுள்ளார். மேலும் இந்த பாடலுக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் செம ட்ரெண்டாகி வரும் இந்த பாடல் 15 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Categories

Tech |