அஸ்வின் நடிப்பில் வெளியான யாத்தி யாத்தி பாடல் யூடியூபில் புதிய சாதனை படைத்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சிசன்-2 நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அஸ்வின். இவர் இதற்கு முன் சீரியல்களிலும், ஆல்பம் பாடல்களிலும் நடித்து வந்தார். மேலும் இவர் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். தற்போது அஸ்வின் என்ன சொல்ல போகிறாய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இயக்குனர் ஹரிஹரன் இயக்கும் இந்த படத்தில் தேஜு அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்தது.
1️⃣ CRORE VIEWS it is for the TRENDING #YaathiYaathi ! 😍🎶
Thank you for the LOVE 🎶 💃➡️ https://t.co/HX7lW7HyUp@i_amak @harshadaa_vijay @abhishekcsmusic @goutham_george @JoeStelson @Anand95428804 @LyricistRam @rm_nagappan #ARSridhar pic.twitter.com/h0ti5zbx0b
— Sony Music South (@SonyMusicSouth) November 12, 2021
இதனிடையே அஸ்வின் நடிப்பில் குட்டி பட்டாஸ், லோனர், கிரிமினல் கிரஷ், அடிபொலி, போன்ற ஆல்பம் பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. மேலும் கடந்த மாதம் இவர் நடிப்பில் யாத்தி யாத்தி என்ற ஆல்பம் பாடல் வெளியாகியிருந்தது. அபிஷேக் இசையமைத்த இந்த பாடலில் அஸ்வினுடன் இணைந்து ஹர்ஷதா விஜய் நடித்துள்ளார். இந்நிலையில் யாத்தி யாத்தி பாடல் யூடியூபில் 1 கோடி பார்வையாளர்களை கடந்து அசத்தல் சாதனை படைத்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.