குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வினின் புதிய ஆல்பம் பாடல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் அஸ்வின். இவர் இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வரை சென்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அஸ்வினுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் அஸ்வின் ரெட்டை வால் குருவி, நினைக்கத் தெரிந்த மனமே உள்ளிட்ட சீரியல்களிலும், சில தமிழ் படங்களில் துணை நடிகராகவும் நடித்துள்ளார்.
#AK
LONER- Official video song out now!Hope you all love it 🖤https://t.co/UELxrJxFkv pic.twitter.com/jFKsDZM3Ci
— Ashwin Kumar (@i_amak) May 28, 2021
மேலும் இவர் சில குறும்படங்களிலும் ஆல்பம் பாடல்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் அஸ்வின் நடிகை ரெபா மோனிகா ஜானுடன் இணைந்து நடித்த குட்டி பட்டாஸ் ஆல்பம் பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது. இதைத் தொடர்ந்து அஸ்வினின் கிரிமினல் கிரஸ் ஆல்பம் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அஸ்வினின் லோனர் ஆல்பம் பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மோகன் ராஜா எழுதியுள்ள இந்த பாடலை அடிக்ரிஸ் இசையமைத்து இயக்கியுள்ளார்.