அஸ்வினி பூச்சிகளை அழிக்கும் மருந்துகள் குறித்த ஆலோசனையை வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளம் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் விவசாயத்தை முதன்மைத் தொழிலாக செய்து வருகின்றனர். இவர்கள் மக்காச்சோளம், கரும்பு, நெல், பயிர் வகைகள், மஞ்சள், வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சாகுபடி செய்கின்றனர். இவர்கள் கடந்த 3 மாதத்திற்கு முன்பாக கரும்பு பயிரிட்டுள்ளனர். இந்த கரும்பு பயிர்களை பூச்சிகள் பெருமளவு தாக்கி சேதப்படுத்துகிறது.
இதன் காரணமாக கரும்பு சாகுபடி பெருமளவு குறைய வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகளுக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் மிகுந்த வேதனை தெரிவிக்கின்றனர். எனவே வேளாண் துறை அதிகாரிகள் இந்த கரும்பு பயிர்களை பார்வையிட்டு அதற்காக உரிய மருந்தை விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.