Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அஸ்வினுக்கு பதிலா….. இந்த பையன எடுத்துருக்கனும்…. ஏன் தெரியுமா?…. பாக் வீரர் சொல்றதுக்கு காரணம் இதுதான்..!!

ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக பிஷ்னோய் இடம்பிடித்திருக்க வேண்டும் என்று பாகிஸ்தானின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்த ஆசியக் கோப்பையில் சூப்பர் 4 சுற்றோடு வெளியேறியது இந்திய அணி. இந்நிலையில் ஆஸ்திரேலியாலில் அடுத்த அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறும் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.. இந்த டி20 அணியில்  கிட்டத்தட்ட ஆசிய கோப்பை தொடரில் ஆடிய வீரர்களே பெரும்பாலானோர் இடம்பெற்றனர்.. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் கேஎல் ராகுல் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.

பேட்டிங்கில்  விராட் கோலி, சூர்யகுமார் யாதவ்,  ரிஷப் பந்த் ஆகியோரும், ஆல்ரவுண்டராக தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல்  ஆகியோர் இடம்பிடித்தனர். அதேபோல சுழற் பந்துவீச்சில் தமிழக வீரர் ஆர். அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரும், வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்..  மேலும் காத்திருப்பு வீரர்களாக முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த டி20 அணி குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சஞ்சு சாம்சன் ஏன் இடம்பெறவில்லை. முகமது ஷமி, தீபக் சஹாரை ஏன் காத்திருப்பு வீரர்களில் வைத்திருக்கிறீர்கள். என ரசிகர்கள் முதல் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா தனது யூடியூப் சேனலில் வீடியோவில் கூறியதாவது, அணியில் 2 விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களுக்குப் பதிலாக ஒரு கூடுதல் பந்துவீச்சாளரைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். மேலும், இந்திய அணி கடந்த காலங்களிலும் நிர்வாகத் தேர்வில் இதுபோன்ற தவறுகளை செய்தது. அவர்கள் அணியில் தினேஷ் கார்த்திக்கும் இருக்கிறார். ஆனால் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்காவிட்டால் அவரை வைத்திருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. அதற்கு பதிலாக கூடுதல் பந்துவீச்சாளரைச் சேர்த்திருக்கலாம்.

ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக பிஷ்னோய் இடம்பிடித்திருக்க வேண்டும்.  ஆஸ்திரேலிய மைதானத்தில் ஃபிங்கர் ஸ்பின்னர்களை விட ரிஸ்ட் ஸ்பின்னர்கள் வெற்றிபெற வாய்ப்பு அதிகம். உலகக் கோப்பைக்கான காத்திருப்பு வீரர்களில் ஒருவராக ரவி பிஷ்னோய் தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும், 15 பேர் கொண்ட அணியில் இளம் லெக் ஸ்பின்னர் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், அஷ்வின் ரிசர்வ் இடத்தில் இருந்திருக்க வேண்டும் என்றார்.

மேலும் அவர் இதனால்தான் அஸ்வினை விட ரவி பிஷ்னோய் சிறந்த தேர்வாக இருந்திருப்பார் என்று நினைக்கிறேன். இந்தியா அஸ்வினுடன் பயணிக்க விரும்பினால், அவரை காத்திருப்பு வீரராக பெயரிட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர். அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.

Categories

Tech |