அஸ்வின் நடிப்பில் உருவாகியுள்ள ‘அடிபொலி’ ஆல்பம் பாடலின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன்- 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அஸ்வின். இதையடுத்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில் என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் அஸ்வின் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் அஸ்வின் நடிப்பில் வெளியான குட்டி பட்டாஸ், லோனர், கிரிமினல் கிரஷ் போன்ற ஆல்பம் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
𝒜 𝒹 𝒾 𝓅 ℴ 𝓁 𝒾 💥
With all your love 🤎#peopleslove https://t.co/4wpg7SGYgB— Ashwin Kumar (@i_amak) August 18, 2021
தற்போது இவர் ‘அடிபொலி’ என்ற மியூசிக் ஆல்பத்தில் நடித்துள்ளார். இதில் அஸ்வினுக்கு ஜோடியாக குஷீ ரவி நடித்துள்ளார். சித்து குமார் இசையமைத்துள்ள இந்த பாடலை பிரபல மலையாள நடிகர் வினீத் ஸ்ரீனிவாசன் மற்றும் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி இருவரும் இணைந்து பாடியுள்ளனர். இந்நிலையில் அடிபொலி பாடலின் அசத்தலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த பாடல் வருகிற ஆகஸ்ட் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது .