யூடியூப்பில் அஸ்வினின் ‘பேபி நீ சுகர்’ என்ற பாடல் வெளியாகி உள்ளது.
அஸ்வின்குமார், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. இவரின் யாத்தி, குட்டி பட்டாசு, அடிபொலி உள்ளிட்ட பாடல்கள் யூடியூபில் டிரெண்ட்யாகியது.
இந்நிலையில் அஸ்வின்குமாரின் “பேபி நீ சுகர்” என்ற பாடல் தற்போது யூடியூபில் வெளியாகி இருக்கின்றது. இந்த பாடலை சிம்பு டுவிட்டரில் வெளியிட்டு இருக்கின்றார். மேலும் இந்தப் பாடலில் அஸ்வினுடன் பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா நடித்திருக்கின்றார். சில தினங்களுக்கு முன்பு லாஸ்லியா மற்றும் அஸ்வின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் அதற்கான காரணம் தற்போது தெரிய வந்திருக்கின்றது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதாக பாராட்டி வருகின்றனர்.