Categories
கிரிக்கெட் விளையாட்டு

அஸ்வின் வீட்டில் 10 பேருக்கு கொரோனா… மனைவி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் வீட்டில் பத்து பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அவரின் மனைவி கூறியுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின். இவர் நடப்பு கிரிக்கெட் போட்டியிலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாவதாக அறிவித்திருந்தார். வேலும் சொந்த பிரச்சினைகள் காரணமாக இந்த தொடரை விட்டு விலகுவதாக அறிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது அவரின் மனைவி ப்ரீத்தி அவரது வீட்டில் பத்து பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எங்கள் குடும்பத்தில் ஆறு பெரியவர்கள், நான்கு சிறியவர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 5 முதல் 8 நாட்கள் மிகவும் மோசமாக உள்ளது. நம்மை தனிமையில் ஆழ்த்தி வருத்தக்கூடியது இந்த கொரோனா. அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்வது சிறந்தது என அஸ்வினின் மனைவி ப்ரீத்தி சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |