அஸ்வின் ஹீரோவாக நடிக்கும் முதல் படத்தின் டைட்டில் லுக் வெளியாகியுள்ளது .
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, நினைக்கத் தெரிந்த மனமே உள்ளிட்ட சீரியல்களிலில் நடித்து பிரபலமடைந்தவர் அஸ்வின் . இதை தொடர்ந்து இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் நடிப்பில் வெளியான குட்டி பட்டாஸ், கிரிமினல் கிரஷ், லோனர் போன்ற ஆல்பம் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது அஸ்வினுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
Glad to release the title look of #CookWithComali fame @i_amak Starring #EnnaSollaPogirai
Directed by @ImHharan
Produced by @tridentartsoffl@Pugazh_VijayTv @Richardmnathan @iamviveksiva @MervinJSolomon @g_durairaj @DoneChannel1 @muralikris1001 @RubiniSakthi #TridentArts pic.twitter.com/btnORYCCSR
— Arya (@arya_offl) June 28, 2021
அதன்படி அஸ்வின் ஹீரோவாக நடிக்கும் முதல் படத்தை டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அறிமுக இயக்குனர் ஹரிஹரன் இயக்கும் இந்த படத்திற்கு மெர்வின் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் லுக்கை பிரபல நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த படத்திற்கு ‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.