சென்னையின் நுழைவாயிலாக கருதப்படும் கிண்டி கத்திபாரா மேம்பாலம் அண்ணா சாலை பூந்தமல்லி சாலை கோயம்பேடு சாலையை இணைக்கும் வகையில் 60 கோடியில் கட்டப்பட்ட கட்டப்பட்ட நவீன மேம்பாலம் ஆகும். இதன் அருகில்தான் ஆலந்தூர் ரெயில் நிலையம் உள்ளது. கத்திப்பாரா மேம்பாலத்தில் கீழ்பகுதியில் 5.37 லட்சம் சதுர அடி பரப்பளவு காலியிடம் இருந்தது. இந்த இடத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நிதியுதவியுடன் நவீனப்படுத்தப்பட்ட பூங்கா மற்றும் உணவகங்க,ள் கடைகள் அமைத்து பொதுமக்கள் வந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கத்திபாரா நகர்ப்புற சதுக்கத்தை முதல்வர் முக ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.சிறுவர்கள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள சறுக்கு விளையாட்டு பகுதிகளையும் பார்வையிட்டார். நடைபயிற்சிக்காக அங்கு அமைக்கப்பட்டுள்ள அழகிய பிளாட்பாரத்தையும், புல் தரைகளையும் கண்டு களித்தார். நடைப்பயிற்சிக்கு அமைக்கப்பட்டு அழகிய பிளாட்பாரத்தில் தடைகளையும் கண்டு களித்தார். அ, ஆ, இ, ஈ உள்ளிட்ட உயிர் எழுத்துக்களும் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. புல் தரையை சுற்றி சிமெண்ட் இருக்கைகள், அலங்கார விளக்குகள், மேல்பால தூண்களில் ஓவியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு உணவு வசதிகளுடன் 56 கடைகள் இடம்பெற்றுள்ளன. பொதுமக்கள் சாப்பிட வசதியாக திறந்த வெளி இருக்கை வசதியும் உள்ளது.