அ.தி.மு.க கட்சியின் சின்னம் முடக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அ.தி.மு.க கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தின் போது இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதோடு நத்தம் விஸ்வநாதன் கொண்டு வந்த தீர்மானங்கள் அனைத்தும் அ.தி.மு.கவில் நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு அ.தி.மு.க கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஓ.பிஎ.ஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களான ஜேசிடி பிரபாகர், வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் நீக்கப்பட்டனர். இந்த தகவல் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இருந்த ஓபிஎஸ்-க்கு தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் 1 1/2 தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட என்னை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்குவதற்கு கே.பி முனுசாமிக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் அதிகாரம் இல்லை.
எனவே அ.தி.மு.க கட்சி விதிகளை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக கேபி முனுசாமி மற்றும் எடப்பாடி பழனிச்சாமியை கட்சியிலிருந்து நீக்க உத்தரவிடுகிறேன் என்று ஓ.பி.எஸ் கூறினார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் மாறி மாறி உத்தரவுகளை பிறப்பித்து வருவதால் அ.தி.மு.கவில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஓ.பி.எஸ் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தால் இடைத்தேர்தல் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் இருவரும் எதிர் கட்சிகளாக நின்றால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.