Categories
மாநில செய்திகள்

அ.தி.மு.கவில் புதிய நிர்வாகிகள் நியமனம்…. ஓ.பி.எஸ் கடும் எதிர்ப்பு…. தேர்தல் ஆணையத்தில் புகார் மனு…!!!

ஓ.பி.எஸ் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அ.தி.மு.க கட்சியில் எடப்பாடி பழனிச்சாமி புதிய நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளார். இதனால் அமைப்புச் செயலாளர் பதவியில் இருந்து பொன்னையன், எஸ்.பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அதற்கு பதில் கட்சியின் துணை பொதுச் செயலாளராக நத்தம் விஸ்வநாதன் மற்றும் கே.பி முனுசாமியும், கழக நிலைய செயலாளராக எஸ்.பி வேலுமணியும், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஆக பொன்னையனும், சி.வி சண்முகம், செல்லூர் ராஜு உட்பட 11 பேர் கழக அமைப்பு செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஓ.பிஎ.ஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அ.தி.மு.க துணை பொதுச்செயலாளர், அமைப்புச் செயலாளர் மற்றும் கழக செயலாளர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி தான் ஒருங்கிணைப்பாளராக இருப்பதாகவும், என்னுடைய அனுமதி இல்லாமல் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். இதனையடுத்து பொதுக்குழு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது புதிய நிர்வாகிகள் தன்னுடைய ஒப்புதல் இல்லாமல் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி தற்காலிக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஓ.பி.எஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். இதை எதிர்த்தும் ஓ.பி.எஸ் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தாகும்.

Categories

Tech |