அ.தி.மு.க உள்கட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களின் வேட்பு மனுக்களை ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் பெற்று கொண்டுள்ளார்.
தேனி மாவட்டம் அதிமுக உட்கட்சி தேர்தல் கடந்த 2 நாட்களாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்களது வேட்புமனுக்களை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் வழங்கியுள்ளனர். அப்போது கட்சியின் அமைப்பு செயலாலர்கள்ளான கருப்பசாமி பாண்டியன், இசக்கி சுப்பையா, ஜக்கையன், ஏ.கே.சீனிவாசன், கணேஷ் ராஜா ஆகியோர் உடனிருந்துள்ளனர்.
இதனையடுத்து மாவட்டத்தில் 177 நகர வார்டு செயலாளர் பதவிக்கு 350 மனு தாக்கல் செய்துள்ளனர், 330 பேரூராட்சி வார்டு பதவிக்கு 750 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர், 12 ஊராட்சி ஒன்றிய கிளைகளுக்கு என பலரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.