கோவை மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோவை செல்வராஜ் கூறியிருப்பதாவது “அ.தி.மு.க என்ற கம்பெனி இன்னும் 6 மாதத்தில் மூடப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் 4 பிரிவுகளாக அ.தி.மு.க பிரிந்து கிடப்பதாகவும் அவர் விமர்சனம் செய்துள்ளார்.
அத்துடன் தான் யார் கூறியும் தி.மு.க-வில் இணையவில்லை என விளக்கமளித்துள்ளார். அண்மையில் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை செல்வராஜ் அ.தி.மு.க இரண்டாக பிரிந்தபோது ஓபிஎஸ் பக்கம் இருந்தார். அப்போது அவருக்கு கோவை மாநகர் மாவட்ட செயலாளர் பதவியானது கொடுக்கப்பட்டது.