Categories
மாநில செய்திகள்

“அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்”….. ஜெயக்குமார் மனு….!!!!

அதிமுக பொதுக்குழுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அதற்கு பாதுகாப்பு கேட்டு இன்று டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ,பெஞ்சமின் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இது தொடர்பாக அளித்த பேட்டியில் “வருகிற 11-ம் தேதி நடைபெற பொதுக்குழு சட்டரீதியாக நடைபெறுகிறது. இந்த பொதுக்குழுவுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம்.

பொதுக்குழு தேவையில்லாத வகையில் மூணாவது நபர் மற்றும் சமுகவிரோதிகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. அவர்களால் பிரச்சினை எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. போலீஸ் தரப்பில் எங்களது மனுவை ஏற்றுக்கொண்டு உரிய பாதுகாப்பு வழங்க உறுதி அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Categories

Tech |