பொதுக்குழு கூட்டம் தொடர்பாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அ.தி.மு.க கட்சியில் சமீப காலமாக ஒற்றைத் தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதாவது எடப்பாடி பழனிச்சாமி ஒற்றை தலைமை வேண்டும் என்று கூற ஓபிஎஸ் இரட்டை தலைமை தான் சிறந்தது என்று கூறி வருகிறார். இதன் காரணமாக எடப்பாடிக்கும் பழனிச்சாமிக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த பொதுக்குழு கூட்டத்தின் போது ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் எடப்பாடி ஆதரவாளர்களால் கடுமையாக அவமானப்படுத்தப்பட்டனர்.
இதன் காரணமாக ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுக்குழு கூட்டத்தை புறக்கணித்துவிட்டு பாதியிலேயே அங்கிருந்து கிளம்பி சென்றனர். இந்நிலையில் வருகிற 11-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கூறப்பட்டிருந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தை நடத்த ஓபிஎஸ் இடையூறாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது புதிய பிரச்சனையும் எழுந்துள்ளது. அதாவது கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் பல்வேறு இடங்களில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக பொதுக்குழு கூட்டத்தில் அதிக அளவில் தொண்டர்கள் கூடுவார்கள் என்பதால் கொரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. எனவே தான் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் எடப்பாடி தரப்பினர் பொதுக்குழு கூட்டத்தை எப்படியாவது நடத்திவிட வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கின்றனர். இதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் பொதுக்குழு கூட்டத்தை இணையத்தளத்தில் நடத்துவது தொடர்பாக எடப்பாடி தரப்பினர் ஆலோசித்து வருகின்றனர்.