Categories
அரசியல்

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம்…. இ.பி.எஸ் போட்ட பக்கா பிளான்…. ஓ.பி.எஸ் என்ன செய்யப்போகிறார்….?

அ‌.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட இருக்கும் தீர்மானங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அ.தி.மு.க கட்சியில் எடப்பாடி பழனிச்சாமிக்கும், ஓ. பன்னீர்செல்வித்திற்கும் இடையே ஒற்றைத் தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த மாதம் 23-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் வருகிற ஜூலை 11-ஆம் தேதி மீண்டும் ஒரு பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் முடிவு செய்தனர். இந்த கூட்டத்தில் தற்போது எடுக்கப்படும் முக்கிய 16 முடிவுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி பொதுக்குழு கூட்டத்தின் போது அம்மா ஜெயலலிதா வகித்த பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் உருவாக்கி அதில் எடப்பாடி பழனிச்சாமியை அமர வைக்க முடிவு செய்துள்ளனர்.

இதன் மூலம் கட்சியின் அனைத்து முடிவுகளையும் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே எடுப்பார். இதனையடுத்து இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்படும். அதன்பிறகு ஓ.பி.எஸ்-க்கு எதிராக 2 முடிவுகள் எடுக்கப்படும் என்றும், எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக பதவியேற்ற பிறகு ஓ.பி.எஸ்ஸை கட்சியிலிருந்து நீக்கிவிடுவார் என்றும் கூறப்படுகிறது. மேலும் தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு ஒப்புதல் வழங்கும் தீர்மானம் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜூலை 11-ஆம் தேதி நடக்க இருக்கும் பொதுக்குழு கூட்டத்தில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Categories

Tech |