Categories
மாநில செய்திகள்

“அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம்” நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை…. இ.பி.எஸ் தரப்பு வாதத்தால் ஆடிப்போன ஓ.பி.எஸ்…!!!

பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவின் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது இ.பி.எஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கட்சியின் உள் விவகாரங்களில் நீதிமன்றத்திற்கு தலையிடுவதற்கு உரிமை கிடையாது என்றும், பொதுக்குழுவிற்குத்தான் அந்த அதிகாரம் இருக்கிறது என்றும் கூறினார். அதன் பிறகு அ.தி.மு.க கட்சியைச் சேர்ந்த 2190 உறுப்பினர்கள் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு ஒப்புதல் வழங்கியதால், ஜூலை 11-ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தை  நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 2432 உறுப்பினர்கள் ஒற்றை தலைமை பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

இதனையடுத்து கட்சியில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகினாலும் கட்சிக்கு எந்த பிரச்சனையும் வராது. ஏனெனில்  தலைமை நிர்வாகிகள் கட்சியை பார்த்துக் கொள்வார்கள். இவர்களுக்கு தீர்மானங்களை நிறைவேற்ற மற்றும் ஒற்றை தலைமை பிரச்சனை குறித்து விவாதிக்க அனைத்து உரிமைகளும் உண்டு என்றார். இதற்கு நீதிபதி பொதுக்குழு கூட்டத்தை ரத்து செய்வதை தவிர மற்ற நிவாரணங்களை உச்சநீதிமன்றத்தில் கேட்டிருக்கலாம் எனவும், பொதுக்குழுவில் நீதிமன்றத்திற்கு தலையிட உரிமை கிடையாது என்றும், ஜூலை 11-ஆம் தேதி பொதுக்குழு கூட்டமானது நடைபெறலாம் எனவும், 2 லட்சம் உறுப்பினர்கள் உள்ள கட்சியில் அனைத்து உறுப்பினர்களும் தனக்கு எதிராக செயல்படுகின்றனர் என்று ஓ.பி.எஸ் வழக்கு தொடர்ந்துள்ளார் என்றும் கூறினார்.

அதன் பிறகு கட்சியின் நலனுக்காக வழக்கு தொடர்ந்திருக்கிறேன் என்று கூறிய ஓ.பி.எஸ் பொதுக்குழு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றுதான் மனுவில் கூறியிருக்கிறாரே தவிர ஒருங்கிணைப்பாளர் பதவி காலியாகவில்லை என மனுவில் குறிப்பிடப்படவில்லை என்றார். இதற்கு எதிர்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை. அவர்கள் சம்மதத்துடன் தான் பொதுக்குழு கூட்டம் நடைபெற வேண்டும் என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கை ஜூலை 9-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

Categories

Tech |